< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
குறைதீர்க்கும் கூட்டம்
|18 Oct 2022 12:15 AM IST
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகள் குறித்து 278 மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மனுக்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை விரைவாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.