திருநெல்வேலி
குறைதீர்க்கும் கூட்டம்
|மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளது
நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் இந்த மாதத்திற்கான (செப்டம்பர்) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், வருகிற 6-ந்தேதி நெல்லை கிராமப்புற மின் வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 9- ந்தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 13-ந்தேதி நெல்லை நகர்ப்புற மின் வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 16-ந்தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் 20-ந்தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 23- ந்தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரியப்படுத்தலாம்.
இந்த தகவலை, நெல்லை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.