< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
22 Aug 2022 4:58 PM GMT

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுக்களை அளித்தனர்.இதில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 166 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார்.கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்