நாமக்கல்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|திருச்செங்கோட்டில், இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செங்கோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் பரமத்திவேலூர் ஆகிய பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருச்செங்கோடு ஈரோடு சாலையில் அமைந்துள்ள திருச்செங்கோடு உதவி இயக்குனர் (ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்) அலுவலக கூட்டரங்கில் உதவி கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் மனுக்களாக அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.