< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
குறைதீர்வு கூட்டம்
|4 Oct 2023 11:48 PM IST
திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை வழங்கினர். இதில் போலீஸ் நிலையத்தில் நடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத 9 மனுக்கள் உள்பட 23 மனுக்கள் பெறப்பட்டது. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் உத்தரவிட்டார். இதில் போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.