< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
|4 Oct 2023 12:45 AM IST
சேலத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.
சேலம் வெங்கட்ராவ் சாலையில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனவே சேலம் நகர கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்விநியோகம் சம்பந்தப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும். இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்து உள்ளார்.