< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|16 Aug 2023 11:16 PM IST
குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் மாவட்ட போலீஸ் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் மொத்தம் 18 மனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து உரிய அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.