< Back
மாநில செய்திகள்
பள்ளிப்பட்டு அருகே குறை கேட்பு முகாம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே குறை கேட்பு முகாம்

தினத்தந்தி
|
18 April 2023 5:06 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கர்லம்பாக்கம் கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் குறை கேட்பு முகாம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமிற்கு பள்ளிப்பட்டு தாசில்தார் அருண்குமார் தலைமை தாங்கி பழங்குடியினரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் புதிய ரேஷன்கார்டு, ஜாதி சான்றிதழ் உள்பட பல கோரிக்கைகளை வைத்து வழங்கப்பட்டன. இந்த முகாமில் துணை தாசில்தார் சுந்தரவேல், வருவாய் ஆய்வாளர் கணேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்