ராமநாதபுரம்
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிராமப்புற பகுதியில் சாலையோரம் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிகஅளவில் உள்ளது. இந்த கருவேல மரங்களால் வாகனஓட்டிகள் சிறு, சிறு காயமடைகின்றனர். எனவே கருவேலமரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மாணிக்கம், ராமநாதபுரம்.
பள்ளிக்கு கதவு அமைக்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி பொதுத்தேர்வு எழுதும் மையமாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பின்புறம் பெரிய கதவு அமைத்து தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் மாணவர்கள், வண்ணாங்குண்டு.
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் அருகே உள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.
பாலாஜி, ஆர்.எஸ்.மங்களம்.
நீரேற்று நிலையம் செயல்பாட்டிற்கு வருமா?
ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரையில் உள்ள நீரேற்று நிலையம் 3ஆண்டுக்கும் மேலாக செயல்படவில்லை அதனால் கீழக்கரை, காஞ்சிறங்குடி, வைகை, நத்தம், குளபதம் போன்ற கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நீரேற்று நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
சிவராஜ், சேதுக்கரை.
குடிநீர் குழாய் வேண்டும்
ராமநாதபுரம் நகர் சிவன் கோவில் கிழக்கு தெரு, பானுமதி நாச்சியார் தெரு ஆகிய பகுதிகளில் போதிய குடிநீர் குழாய்கள் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனோகரன், ராமநாதபுரம்.