< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சிவகாசியில் சரவெடிகள் பறிமுதல்
|25 Oct 2023 1:10 AM IST
சிவகாசியில் சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் ராமலிங்காபுரத்தை சேர்ந்த முருகன் மனைவி லட்சுமி (வயது 39). இவருக்கு சொந்தமான பட்டாசு கடை பேராபட்டி பகுதியில் இயங்கி வருகிறது. இந்தநிலையில் லட்சுமியின் பட்டாசு கடையில் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மொய்தீன் அப்துல்காதர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சரவெடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து லட்சுமி மற்றும் கடை ஊழியர் ராஜவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.