< Back
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்து
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்து

தினத்தந்தி
|
24 Dec 2022 9:45 AM IST

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தி தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அன்பையும் பொறுமையையும் மனித சமுதாயத்திற்கு போதித்த இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசியக் கண்டத்தில் உள்ள பெத்லகேமில் பிறந்து உலகெங்கும் அன்பின் நற்குணத்தை போதித்தவர் இயேசுநாதர்.

"அன்பு கொள்ளாதவர் கடவுளை அறியாதவர். ஏனெனில் அன்பே கடவுள்" என்பது போன்ற இயேசுபிரானின் நல்வார்த்தைகள், மக்களின் மீது அனைவரையும் அன்பு செலுத்த வைப்பவை.

இயேசுநாதரின் சொற்களை மனதில் நிறுத்தி அனைவரிடமும் அன்பு செலுத்திடுவோம். உலகெங்கும் அமைதி நிலவி, மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட கிறிஸ்துமஸ் நாளில் நெஞ்சார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்