< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ராசிபுரத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி
|23 Feb 2023 1:00 AM IST
ராசிபுரம்:-
ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு சிவராத்திரி விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ரிஷபவாகனம், யானை வாகனம், கிளிவாகம், புலிவாகனம் என தினசரி ஒருவாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. அம்மனை சக்தி அழைத்தலும், தொடர்ந்து சாமிஊஞ்சல் ஆடுதல், பூ பந்தல், பந்தபலி இடுதல், பூ வாங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் நேற்று மாலையில் முத்துக்காளிப்பட்டி மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. பூசாரிகள் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள், 20க்கும் மேற்பட்ட கோழிகளை வாயால் கடித்து பலியிட்டனர். இந்நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.