< Back
மாநில செய்திகள்
கிராவல் மண் கடத்திய டிரைவர் கைது; லாரி பறிமுதல்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கிராவல் மண் கடத்திய டிரைவர் கைது; லாரி பறிமுதல்

தினத்தந்தி
|
5 July 2022 1:11 AM IST

கிராவல் மண் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டு, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் தலைமையில் போலீசார் எளம்பலூர் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த டிப்பர் லாரியை போலீசார் வழிமறித்தனர். டிரைவர் சிறிது தூரம் தள்ளிச்சென்று லாரியை நிறுத்திவிட்டு, லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். பின்னர் போலீசார் சென்று டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக சுமார் 2½ யூனிட் கிராவல் மண் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் எளம்பலூர் வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் பிரசாத்தை (வயது 20) பிடித்து கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்