< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மானியம் - தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
|19 Feb 2023 12:14 PM IST
பள்ளிகளுக்கு மானியம் வழங்குவதில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை,
தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு(தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"நடப்பு கல்வியாண்டில் (2022-23) அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான பராமரிப்பு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பள்ளிகளுக்கு மானியம் வழங்குவதில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.
நிரந்தர அங்கீகாரம் பெற்றபள்ளிகள் 4 வகைச் சான்றிதழ்கள் பெற்றிருப்பதை சரிபார்த்த பின்னரே கற்பித்தல் மானியத்தை விடுவிக்க வேண்டும். அரசு ஒப்புதல் அளித்த இடங்களில்தான் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்."
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.