ராணிப்பேட்டை
தாத்தா, பாட்டி தினம் கொண்டாட்டம்
|வாலாஜா பள்ளியில் தாத்தா, பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.
வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள பிரைட் மைண்ட்ஸ் வித்யோதயா பள்ளியில் சிறு குழந்தைகளின் மனதில் மூத்தோரின் அன்பு, பண்புகளை உணர்த்தும் விதமாக தாத்தா, பாட்டி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் நிர்மல் ராகவன் தலைமை தாங்கினார். நந்தினி நிர்மல் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் லட்சுமி வழிகாட்டுதலின் பேரில் நடந்த இந்த விழாவில் மாணவ- மாணவிகளின் பொம்மலாட்ட நிகழ்ச்சியும், ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய தனித்திறமைகளை பாடல், ஆடல் மூலம் வெளிப்படுத்தினர். மாணவர்களின் பெற்றோர்களும், தாத்தா, பாட்டிகளும் மலர்களைத் தூவி தங்கள் ஆசிர்வாதம் வழங்கினர். தாத்தா, பாட்டிகள் தங்களது பேரக்குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர். ஒவ்வொரு குழந்தைகளும் தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பள்ளியின் அலுவலக நிர்வாகி பிரபாகரன், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.