சேலம்
மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி மூதாட்டி பலி
|கொங்கணாபுரம் அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார்.
எடப்பாடி:
கொங்கணாபுரம் அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார்.
மூதாட்டி
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆயமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் நடுத்தாய் (வயது 65). இவருடைய பேரன் ராஜ்குமார். இவர்கள் 2 பேரும் ஒரு மொபட்டில் எட்டிகுட்டை மேட்டில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தனர். ராஜ்குமார் மொபட்டை ஓட்டினார். நடுத்தாய் பின்னால் அமர்ந்திருந்தார். கொங்கணாபுரம் அருகே முனியம்பட்டி பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
விசாரணை
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நடுத்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜ்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து சென்ற கொங்கணாபுரம் போலீசார் இறந்த நடுத்தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.