< Back
மாநில செய்திகள்
மேல்மருவத்தூர் அருகே வாகனம் மோதியதில் பேத்தியுடன் தாத்தா, பாட்டி பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மேல்மருவத்தூர் அருகே வாகனம் மோதியதில் பேத்தியுடன் தாத்தா, பாட்டி பலி

தினத்தந்தி
|
16 Jun 2023 3:09 PM IST

மேல்மருவத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பேத்தியுடன் தாத்தா, பாட்டி பலியானார்கள்.

மோட்டார் சைக்கிள் மீது மோதியது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த காட்டுக்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவரது மனைவி ராணி(42). இவர்களுடைய பேத்தி அட்சயா (4). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஆலப்பாக்கத்தில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

மேல்மருவத்தூரை அடுத்த செண்டிவாக்கம் என்ற இடத்தில் வரும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் சேகர், ராணி, அட்சயா 3 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, பாட்டி, பேத்தி விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்