< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிராமி விருதை வென்ற சக்தி இசைக்குழு: மத்திய மந்திரி எல்.முருகன் பாராட்டு
|6 Feb 2024 6:59 AM IST
கிராமி விருதை வென்ற சக்தி இசைக்குழுவுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
மத்திய மந்திரி எல்.முருகன் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
உலகின் தலைசிறந்த இசை ஆல்பங்களுக்கும், இசை கலைஞர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்படும் 'கிராமி' விருதுகளை இந்த ஆண்டு நம்முடைய பாரத இசை கலைஞர்கள் அறுவடை செய்திருப்பதில் மகிழ்ச்சி. தமிழ், இந்தி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மொழிகளில் எண்ணற்ற திரையிசை பாடல்களை பாடி வரும் பாடகர் சங்கர் மகாதேவன் அங்கம் வகிக்கும் 'சக்தி இசைக்குழு' இந்த ஆண்டுக்கான கிராமி விருதை 'திஸ் மொமன்ட்' என்ற ஆல்பத்திற்காக பெற்றுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தாள கலைஞர் செல்வகணேஷ், கிதார் கலைஞர் ஜான் மெக்லாக்லின் மற்றும் தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் ஆகியோர் ஒன்றிணைந்து 'கிராமி' விருதை பெற்றுள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.