< Back
மாநில செய்திகள்
நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறிவிப்பு
மாநில செய்திகள்

நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறிவிப்பு

தினத்தந்தி
|
21 March 2023 8:28 PM IST

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

நாளை உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

உலக தண்ணீர் தினமான நாளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், குறைவெண் வரம்பின் படி கூட்டத்திற்கு உறுப்பினர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கிராம சபை கூட்டத்தினை அந்தந்த ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையைப் பின்பற்றி மார்ச் 22 ஆம் தேதியன்று காலை 11.00 மணியளவில் நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கிராம சபை கூட்டங்களை மதச் சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்