< Back
மாநில செய்திகள்
காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம்
சிவகங்கை
மாநில செய்திகள்

காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2023 12:15 AM IST

காந்தி ஜெயந்தியையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கிராமசபை கூட்டம்

காந்திஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடந்தது. அதன்படி சிவகங்கை மாவட்டத்திலும் கிராமசபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடந்தது. சிவகங்கை ஒன்றியம் பொன்னாகுளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் கலந்து கொண்டார். இதில் சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, பொன்னா குளம் ஊராட்சி தலைவர் கார்த்திகைசாமி, சித்தலூர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை அடுத்த நாலு கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர் சக்தி, உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வம், கண்ணன், தலைமை ஆசிரியை தமிழ்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

காஞ்சிரங்கால்

காஞ்சிரங்கால் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மணிமுத்து தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஓவர்சியர் மாலதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கண்டாங்கிபட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் மந்தக்காளை தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலர் நந்தினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஊராட்சி துணை தலைவர் உலகம்மாள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட மாவட்ட குறைதீர்க்கும் அலுவலர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்