< Back
மாநில செய்திகள்
ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்; 22-ந்தேதி நடக்கிறது
வேலூர்
மாநில செய்திகள்

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்; 22-ந்தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
19 March 2023 11:25 AM GMT

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 860 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 22-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் 22-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் பங்குபெற்று கூட்டத்தில் வைக்கப்படும் பொருட்கள் குறித்து விவாதிக்கலாம்.

கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றியும், கிராம ஊராட்சி நிர்வாக மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, சிறுதானிய உற்பத்தி மற்றும் அதன் நன்மை குறித்த விழிப்புணர்வு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பாரத்நெட் இணையதள வசதி உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்