< Back
மாநில செய்திகள்
நார்சம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

நார்சம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2023 12:11 AM IST

நார்சம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்.

நார்சம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்.

கந்திலி ஊராட்சி ஒன்றியம் நார்சம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று தண்ணீர் கிணறு பகுதியில் 20 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தரவும், கந்திலி மோட்டூர் பகுதியில் இருந்து நார்சம்பட்டி வரையும், கும்மிடிகாம்பட்டி முதல் நார்சம்பட்டி வரையும் தார் சாலை அமைத்து தரவும் உறுதியளித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் பன்னீர் வாசித்தார். கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் மோகன்குமார், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் முருகேசன், வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் ராகினி, உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

துணைத்தலைவர் ராணி கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் சீனிவாசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்