< Back
மாநில செய்திகள்
மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்; அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்; அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

தினத்தந்தி
|
3 Oct 2022 4:06 PM IST

மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு,

கிராமசபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூவரசம்பட்டு முதல் நிலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

அவருடன் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரதிராஜா, துணைத்தலைவர் பிரசாத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மனோகரன், மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன், துணை தலைவர் பிரகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

காட்டாங்கொளத்தூர்

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட குன்னவாக்கம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா தலைமை தாங்கினார், துணைத்தலைவர் அன்னம்மாள் முன்னிலை வகித்தார். வீராபுரம் ஊராட்சியில் தலைவர் டில்லி, துணைத்தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம், அஞ்சூர் ஊராட்சியில் தலைவர் செல்வி தேவராஜன், துணைத்தலைவர் நித்யானந்தம், வார்டு உறுப்பினர் உமா கணேஷ், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் தலைவர் விஜயலட்சுமி துரைபாபு, துணைத்தலைவர் கே.பி.ராஜன், ஆப்பூர் ஊராட்சி தலைவர் குமாரசாமி, துணைத்தலைவர் கேசவன் கலந்து கொண்டனர்.

ஆலப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பரிமளா ஜெய்சங்கர், துணைத்தலைவர் சத்யாகோபி, ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி திருமலை, ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கவுதமன், துணைத்தலைவர் இந்துகுமார், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ். துணைத்தலைவர் சாந்தகுமாரி அரிபாபு, புலிப்பாக்கம் ஊராட்சியில் நிர்மலா அசோகன், துணைத்தலைவர் குமரேசன், ரெட்டிபாளையம் ஊராட்சியில் தலைவர் சந்தியா செந்தில், துணைத்தலைவர் சந்தானம், பட்ரவாக்கம் ஊராட்சியில் தலைவர் துர்கா செல்வராஜ், துணைத்தலைவர் ராமன், வல்லம் ஊராட்சியில் தலைவர் காந்தி, துணைத்தலைவர் விஜயகுமார், வில்லியம் பாக்கம் ஊராட்சியில் தலைவர் மேனகா ஏகாம்பரம், துணை தலைவர் வரதன், வெங்கிடாபுரம் ஊராட்சியில் தலைவர் பாலாஜி, துணை தலைவர் ஸ்ரீதர், வார்டு உறுப்பினர் மகேஸ்வரி ஏழுமலை, கொண்ட மங்களம் ஊராட்சியில் தலைவர் பாலு துணை தலைவர் ஆறுமுகம், பாலூர் ஊராட்சியில் தலைவர் நிர்மலா முத்துகுமாரசாமி, துணை தலைவர் ராஜேஷ், ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், பெரும்பேர் கண்டிகை ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மல்லிகா மணி, ஊராட்சி செயலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிப்பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா பலராமன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் கே.வெங்கடேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சித்தாமூர்

சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தீபா முனுசாமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சேகர், ஊராட்சி செயலாளர் சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேன்பாக்கம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஏழுமலை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் நித்தியா மாணிக்கம், ஊராட்சி செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் செய்திகள்