< Back
மாநில செய்திகள்
கோவளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கோவளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

தினத்தந்தி
|
27 Jan 2023 3:26 PM IST

கோவளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்றார்.

கிராமசபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோவளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கலந்துக்கொண்டு கிராம மக்களிடம் கலந்துரையாடினார். இதில் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், பயிற்சி கலெக்டர் அபிலாஷா கவுர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதுபோல வீராபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் டில்லி, துணைத்தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். குன்னவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா, துணைத்தலைவர் அன்னம்மாள் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.

அஞ்சூர் ஊராட்சி

அஞ்சூர் ஊராட்சியில் தலைவர் செல்வி தேவராஜன், துணை தலைவர் நித்யானந்தம், வார்டு உறுப்பினர். கணேஷ், ஆப்பூர் ஊராட்சியில் தலைவர் குமாரசாமி, துணை தலைவர் கேசவன், ஆலப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பரிமளா ஜெய்சங்கர், துணை தலைவர் சத்யா கோபி, ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி திருமலை, ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கவுதமன், துணை தலைவர் இந்துகுமார், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துணை தலைவர் அரிபாபு, புலிப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் நிர்மலா அசோகன், துணை தலைவர் குமரேசன், பட்ரவாக்கம் ஊராட்சியில் தலைவர் துர்கா செல்வராஜ், துணை தலைவர் ராமன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

வல்லம் ஊராட்சியில் தலைவர் காந்தி, துணை தலைவர் விஜயகுமார், வில்லியம்பாக்கம் ஊராட்சியில் தலைவர் மேனகா ஏகாம்பரம், துணை தலைவர் வரதன், பாலூர் ஊராட்சியில் நிர்மலா முத்துகுமாரசாமி, துணை தலைவர் ராஜேஷ், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் தலைவர் விஜயலட்சுமி துரைபாபு, துணைத்தலைவர் கே.பி.ராஜன் ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா, குடிநீர், சாலை, மின்வசதி, கழிவுநீர் கால்வாய், மது ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காட்டாங்கொளத்தூர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் குடியரசு தினத்தையொட்டி மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுமதி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் தேவையான பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்வதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வண்டலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி விஜயராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கவிதா சத்திய நாராயணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெடுங்குன்றம்

நெடுங்குன்றம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீ சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் விஜயலட்சுமி சூர்யா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வேங்கடமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரவி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்வதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கீரப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாலாஜி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலிண்டர் வெடித்து வீடு இழந்த குடும்பத்திற்கு புதியதாக பிரதம மந்திரி வீடு கட்ட திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணையை ஊராட்சி மன்ற தலைவர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கினார்.

காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நளினி ஜெகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வினோதினி ஞானசேகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்