< Back
மாநில செய்திகள்
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்
வேலூர்
மாநில செய்திகள்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்

தினத்தந்தி
|
1 Oct 2023 11:58 PM IST

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று (திங்கட்கிழமை) கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிராமசபை கூட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேற்பார்வையாளர்கள் நியமனம்

மேலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், 2022-23-ம் ஆண்டிற்கான சமூக தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லாத கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல், இதரபொருட்கள் பற்றி கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

கிராமசபை கூட்டங்களில் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், பார்வையாளர்களாக கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கிராமசபை கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் மற்றும் சிறப்பு மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்