< Back
மாநில செய்திகள்
450 பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

450 பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம்

தினத்தந்தி
|
30 Sept 2023 2:04 AM IST

450 பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துக்களிலும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கீழ்காணும் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்து கடந்த (1.4.2023 முதல் 30.9.2023) வரை விவாதித்தல், கிராம பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கிராம பஞ்சாயத்தின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2023-2024-ம் ஆண்டிற்கான தொழிலாளர் வரவு, செலவு திட்டத்தினை செப்டம்பர் 23-ந் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கை, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2023 -2024 மற்றும் 2024- 2025-ம் ஆண்டிற்கான கிராம பஞ்சாயத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள், தூய்மை பாரத இயக்கம் மற்றும் சுகாதாரப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரியின் ஊரக குடியிருப்பு திட்டம், 2023 2024-ம் ஆண்டிற்கான சமூக தணிக்கை செயல்திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம பஞ்சாயத்து அறிவிப்பு செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

எனவே காந்தி ஜெயந்தி அன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறேன். மேற்கண்ட தகவலை கலெக்டர் ெஜயசீலன் கூறினார்.


மேலும் செய்திகள்