விருதுநகர்
54 பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம்
|சிவகாசி யூனியனில் 54 பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி யூனியனில் 54 பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டம்
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 கிராம பஞ்சாயத்துகளில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
விஸ்வநத்தம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் யூனியன் தலைவர் முத்துலட்சுமிவிவேகன்ராஜ், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மண்டல அலுவலர் அரவிந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புகழேந்தி, ராமமூர்த்தி கலந்துகொண்டு மக்களிடம் குறைகள் கேட்டனர். கூட்டத்தில் ஊராட்சி துணைத்தலைவர் நாகேந்திரன், ஊராட்சி செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதேபோன்றுஆனையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லயன் லட்சுமிநாராயணன் தலைமையிலும், பள்ளப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற (பொறுப்பு) தலைவர் ராஜபாண்டியன் தலைமையிலும், நாரணாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன், சித்துராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதிசுப்புராஜ், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி, அனுப்பன்குளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாபாண்டியராஜன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தீர்மானங்கள்
அதேபோல தேவர்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை, ஆனைக்குட்டம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ், பூலாவூரணி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரி தலைமையிலும், துணைத்தலைவர் பாண்டி, முன்னிலையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதே போன்று சிவகாசி ஒன்றியத்தில் 54 பஞ்சாயத்துக்களிலும் ஊராட்சி மன்றதலைவர்கள் தலைமையில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சித்துராஜபுரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு, சித்துராஜபுரம் கிராமத்தில் உள்ள கடைகளில் குட்கா, கஞ்சா மற்றும் புகையிலைகள் விற்பனையாகின்றது அதனைமுற்றிலும் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.