மயிலாடுதுறை
241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
|மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 2-ந்தேதி(திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டபணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக மாற்றுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.எனவே கிராமசபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டு்ம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.