< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிராமசபைக் கூட்ட செலவின வரம்பு ரூ.5000 ஆக உயர்வு - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு
|20 July 2022 4:27 PM IST
கிராம சபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.5000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
கிராம சபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.5000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.
அடுத்தபடியாக,கிராமசபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது; அத்தீர்மானங்களை விரைவாக,முழுமையாக நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகள் மிக அவசியமாகிறது" என்று கூறியுள்ளது.