திண்டுக்கல்
கிராமசபை கூட்டம்
|சத்திரப்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
சத்திரப்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சி செயலர் கிரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், 'மக்களைத்தேடி மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி' என்ற திட்டத்தின்படி ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் மாரியம்மாள், துணைத்தலைவர் ராணி மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். வார்டு உறுப்பினர்கள், செயலர் ஆறுமுகம், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.