மயிலாடுதுறை
கிராமசபை கூட்டம்
|மணக்குடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் வீரமணி தலைமையில் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் கலைவாணி சங்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். கூட்டத்தில் மணக்குடி ஊராட்சியில் பிரதான சாலை அருகில் சற்று தாழ்வான பகுதியில் மயிலாடுதுறை நகருக்கான ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலைய கட்டிட வளாகத்திலும், உட்புறத்திலும் நல்ல சவுடு மணல் அல்லது செம்மண் கொட்ட வேண்டும். புதிய பஸ் நிலைய பகுதியில் மழைக்காலங்களில் பொதுமக்களை பாதிக்காத வகையில் வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை பார்வையிட சென்ற ஒன்றியக்குழு தலைவி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களை திட்டிய நகர சபை தலைவர் செல்வராஜூக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதேபோல் திருக்கடையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருக்கடையூர் ஊராட்சி தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி துணைத் தலைவர், உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆக்கூரில் ஊராட்சி தலைவர் சந்திரமோகன் கிள்ளியூர் ஊராட்சியில் தலைவர் கோவிந்தசாமி், பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்தி ஆனந்தன், டி. மணல்மேடு ஊராட்சியில் தலைவர் திலகவதி துரைராஜன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.