தேனி
சின்னமனூரில் பட்டப்பகலில் துணிகரம்: வீடு புகுந்து 12½ பவுன் நகை திருட்டு
|சின்னமனூரில் வீடு புகுந்து 12½ பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
சின்னமனூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் செல்வலட்சுமி (வயது 43). இவர் வீட்டை பூட்டி சாவியை அருகில் உள்ள ஜன்னலில் வைத்து விட்டு வீரபாண்டியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர் சென்றதும் ஜன்னலில் இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்தனர். பின்னர் உள்ளே சென்று அங்கு பீேராவில் இருந்த 12½ பவுன் நகையை திருடி சென்றனர். இந்நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் வீடு திறந்து கிடப்பதை கண்டு செல்வலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பதறி அடித்து கொண்டு அங்கு வந்த செல்வலட்சுமி வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12½ பவுன் நகை திருடுயோய் இருந்தது. இதுகுறித்து அவர் சின்னமனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீடு புகுந்து நகையை திருடி சென்ற துணிகர சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது,