< Back
மாநில செய்திகள்
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா
மாநில செய்திகள்

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா

தினத்தந்தி
|
24 Sept 2024 7:25 AM IST

சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கும் இவ்விழாவில், பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, அணுசக்தி கழகம் முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் அனில் ககோட்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 55 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஓராண்டாக துணைவேந்தர் யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போது ஒருங்கிணைப்புக் குழுதான், பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கிறது. இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழா துணைவேந்தர் இல்லாமல் நடைபெறுகிறது. 167 ஆண்டு பழமையும், பாரம்பரியமும் மிக்க பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்