< Back
மாநில செய்திகள்
சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா

தினத்தந்தி
|
6 March 2023 12:31 AM IST

சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கீழப்புலியூர், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், (யுகேஜி) மழலையர் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா முதன் முறையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் த.முருகேசன் தலைமை தாங்கினார். பள்ளியின் நிறுவனர் ஆர்.பரமசிவம் மற்றும் இயக்குனர் தனலட்சுமி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் 1-ம் வகுப்பு மாணவி பாரதி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி உறையூர், தயாநிதி மெமோரியல் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுதர்சன், முதல்வர் நர்மதா சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டயங்களை வழங்கி பாராட்டி பேசுகையில், மாணவர்கள் தங்களது திறமைகளை எவ்வாறு வளர்த்து கொள்ள வேண்டும், மாணவர்கள் எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட்டு சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நேரங்களை எவ்வாறு செலவிட வேண்டும், குழந்தைகள் உறவினர்களுடன் பழகும் சந்தர்ப்பங்களை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுத்து உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் 1-ம் வகுப்பு மாணவி ஆராதனா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்