< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
செந்தூரான் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
|6 Jun 2023 12:08 AM IST
செந்தூரான் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவர் ஏ.வி.எம். செல்வராஜ் தலைமை தாங்கினார். முதன்மை செயல் அதிகாரி ஏ.வி.எம்.எஸ். கார்த்திக் வரவேற்றார். முதல்வர் கணேஷ் பாபு அறிக்கையை வாசித்தார். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஸ்ரீமதி 170-க்கும் மேற்பட்ட இளநிலை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார். மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஸ்ரீ அருண் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குனர் வயிரவன், துணை தலைவர் சோம.நடராஜன், தாளாளர் ஏ.வி.எம். ராமையா, செயலர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.