< Back
மாநில செய்திகள்
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
மாநில செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தினத்தந்தி
|
27 Nov 2023 10:34 PM IST

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது.

சென்னை,

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது.

வரும் ஜனவரி மாதம் 7-ம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வுக்கு, நவ. 1 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயா்த்தி ஆசிரியா் தோ்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்