< Back
மாநில செய்திகள்
பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
16 Feb 2023 12:15 AM IST

சின்னசேலம் அருகே பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை 7 பேர் மீது வழக்கு


சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த தகரை வடக்கு காட்டு கொட்டாைய சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் தினேஷ்(வயது 22). பி.காம்.படித்துள்ள இவர் அவரது தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். தினேசுக்கும் இதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் யுவராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை யுவராஜ் அதே கிராமத்தை சேர்ந்த கொடுவாகுமார், முருகேசன், செல்லதுரை, கந்தசாமி, சேது, அண்ணாமலை ஆகிய அனைவரும் சேர்ந்து தினேசை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷ் எங்கே சென்றார் என தெரியவில்லை.பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை காணாத நிலையில் நேற்று மதியம் பூசப்பாடி கிராம எல்லையில் உள்ள காப்பு காட்டில் கருவேல மரத்தில் தினேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக யுவராஜ் உள்பட 7 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்