< Back
மாநில செய்திகள்
பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை

தினத்தந்தி
|
31 Aug 2022 2:14 AM IST

சேலத்தில் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்,

பட்டதாரி பெண்

சேலம் பொன்னம்மாபேட்டை வீராணம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 29). பட்டதாரியான இவருக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கணவருடன் கோபித்துக்கொண்டு மனோன்மணி கடந்த ஜனவரி மாதம் முதல் பொன்னம்மாபேட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

தீக்குளித்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் மனோன்மணி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மனோன்மணி இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீஸ் உதவி கமிஷனர் சரவணகுமார், அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்