< Back
மாநில செய்திகள்
பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
4 Aug 2022 1:17 AM IST

மகன் காதுகுத்து விழா தொடர்பாக கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அன்னதானப்பட்டி:-

மகன் காதுகுத்து விழா தொடர்பாக கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சேலத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பட்டதாரி பெண்

சேலம் தாதகாப்பட்டி கேட் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். தனியார் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி (வயது 31). பி.ஏ., பி.எட். பட்டதாரி. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மகனுக்கு மொட்டையடித்து காதுகுத்து விழா நடத்த கணவன்- மனைவி இருவரும் முடிவு செய்தனர். அதற்காக உறவினர்கள் யாரையெல்லாம் அழைக்கலாம் என்று அடிக்கடி பேசி வந்தனர்.

கணவருடன் தகராறு

நேற்று காலையில் மகன் காதுகுத்து விழாவுக்கு உறவினர்களை அழைப்பது தொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணவருடன் கோபித்துக்கொண்டு நந்தினி தனது அறைக்கு சென்றார். மனைவியின் கோபம் சிறிது நேரத்தில் சரியாகி விடும் என தனபால் நினைத்தார்.

நீண்டநேரம் ஆகியும் மனைவி அறையை விட்டு வெளியே வராததால் சமாதானப்படுத்த தனபால் நந்தினியின் அறைக்கு சென்றார். அங்கு மின்விசிறியில் நந்தினி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தனபால் தூக்கில் இருந்து மனைவியை கிழே இறக்கினார்.

சாவு

பின்னர் உறவினர்கள் உதவியுடன் நந்தினியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு ெசன்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் நந்தினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நந்தினிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தி விசாரணை நடத்தினார். மகன் காதுகுத்து விழா தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கணவருடன் கோபித்துக்கொண்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்