< Back
மாநில செய்திகள்

திருப்பத்தூர்
மாநில செய்திகள்
ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

15 Jun 2023 12:21 AM IST
ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது. டாக்டர் பொ.பிரபாகர், ரத்த வங்கி அலுவலர் டாக்டர் குமரவேல் ஆகியோர் வரவேற்றனர். இதில் திருப்பத்தூர் ஈஸ்வரி கல்வி அறக்கட்டளையை சேர்ந்த ஜி.பி.பார்மசி கல்லூரி மாணவர்கள் 20 பேர் ரத்த தானம் செய்தனர்.
ரத்த தானம் செய்த மாணவர்களை கல்லூரியின் நிறுவனர் என்ஜினீயர் ஜி.பொன்னுசாமி, முதல்வர் டாக்டர் தீன்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.