< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அஞ்சலக சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் - டிடிவி தினகரன்
|29 Jun 2022 3:26 PM IST
அஞ்சலக சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அஞ்சலக சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் தயிர், கோதுமை மாவு ஆகியவற்றிற்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது ஏற்புடையதல்ல.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விதமான புதிய வரி விதிப்பையோ, ஏற்கனவே அளிக்கப்பட்ட வரிவிலக்கை ரத்து செய்வதையோ மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.