< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வேண்டுகோள்
|13 Dec 2022 3:25 PM IST
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு உயர்த்தி, வழங்கும் அக விலைப்படியானது எப்படி பயனுள்ள வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் காலத்தே சென்றடைகிறதோ அதே போல தமிழக அரசும் அவ்வப்போதே அகவிலைப்படி உயர்வை அறிவித்து அவ்வப்போதே வழங்க வேண்டும் என்பது நியாயமானது.
இதைத்தான் மாநில அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக அரசு-அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உரிய அகவிலைப்படியை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.