< Back
மாநில செய்திகள்
பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்
அரியலூர்
மாநில செய்திகள்

பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

தினத்தந்தி
|
16 Nov 2022 6:20 PM GMT

பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார்.

தமிழக அரசின் உத்தரவின்படி மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டியை அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் 43 பேரும், கல்லூரி மாணவ-மாணவிகள் 12 பேரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்த பேச்சுப்போட்டியில் முதல் இடத்தை முத்துவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி கொ.பவித்ராவும், இதேபோல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் முதல் இடத்தை தத்தனூர் மீனாட்சி கல்வியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவி ப.பவித்ராவும் பிடித்தனர். போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசை உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் பாஷாஜானும், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி சுவேதாவும் பெற்றனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையிலும், இவை அல்லாமல் அரசு பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பேருக்கு சிறப்பு பரிசு தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் கலெக்டர் மூலம் வழங்கப்படவுள்ளது.

மேலும் செய்திகள்