< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
அரசு பள்ளிக்கு இருக்கைகள்
|4 Sept 2022 12:09 AM IST
வளவனூர் அரசு பள்ளிக்கு இருக்கைகளை ரவிக்குமார் எம்.பி. வழங்கினார்
வளவனூர்,
வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 20 இருக்கைகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கு வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ் வரவேற்றார். விழாவில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளிக்கு இருக்கைகளை வழங்கி பேசினார்.
இதில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கு இருக்கைகள் வழங்கிய விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா கவுரவித்தார். முடிவில் வளவனூர் தி.மு.க. நகர செயலாளர் ஜீவா நன்றி கூறினார்.