< Back
தமிழக செய்திகள்
புதர்மண்டி காணப்படும் அரசு பள்ளி விளையாட்டு மைதானம்
தஞ்சாவூர்
தமிழக செய்திகள்

புதர்மண்டி காணப்படும் அரசு பள்ளி விளையாட்டு மைதானம்

தினத்தந்தி
|
22 May 2023 12:15 AM IST

புதர்மண்டி காணப்படும் அரசு பள்ளி விளையாட்டு மைதானம்

சேதுபாவாசத்திரம் அருகே புதர்மண்டி காணப்படும் அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதர் மண்டி காணப்படும் மைதானம்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் உள்ளது. மனிதர்களின் ஆரோக்கியத்தில் விளையாட்டிற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

இந்த பள்ளி விளையாட்டு மைதானத்தை அந்த பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் பயன்படு்த்தப்பட்டு வந்தது. தற்போது பராமரிப்பின்றி அதிகளவில் மைதானத்தில் புல், செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மைதானம் புதர் மண்டி காணப்படுவதால் பகலிலேயே பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் சுற்றித்திரிகின்றன.

சீரமைத்து தர வேண்டும்

இதனால் சிறுவர்கள், மாணவர்கள், பெரியவர்கள் மைதானத்தை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை விடப்பட்டு்ள்ளது. எனவே பள்ளி தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பயன்பெறும் வகையில் புதர்மண்டி காணப்படும் விளையாட்டு மைதானத்தை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என அரசுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்