< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கோவில்பட்டி அரசு பள்ளியில்ஆசிரியர் தினவிழா
|7 Sept 2023 12:15 AM IST
கோவில்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தினவிழா மற்றும் வ.உ.சி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வ. உ. சிதம்பரனார், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவியர் கிரீடம் அணிவித்து மரியாதை செய்தனர். விழாவுக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். துணை ஆளுநர் முத்துசெல்வம், செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா வரவேற்று பேசினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.