< Back
மாநில செய்திகள்
மகளிர் விடுதிகளை பதிவுசெய்ய அரசு உத்தரவு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மகளிர் விடுதிகளை பதிவுசெய்ய அரசு உத்தரவு

தினத்தந்தி
|
25 July 2022 11:01 PM IST

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக மாணவிகள், பெண்கள் தங்கி இருக்க கூடிய விடுதிகளை பற்றிய விவரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரிடம் பதிவுசெய்யுமாறு அரசு உத்தரவிட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக மாணவிகள், பெண்கள் தங்கி இருக்க கூடிய விடுதிகளை பற்றிய விவரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரிடம் பதிவுசெய்யுமாறு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகளை சமூகநலத்துறையின் மூலம் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் வரும் 1.8.22-க்குள் இணையதள பக்கமான https://tnswp.com என்ற இணையதள முகவரியில் உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. பதிவு செய்யும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்