< Back
மாநில செய்திகள்
விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்க அரசு நெருக்கடி கொடுக்கிறது: சீமான்  விமர்சனம்
மாநில செய்திகள்

விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்க அரசு நெருக்கடி கொடுக்கிறது: சீமான் விமர்சனம்

தினத்தந்தி
|
17 Oct 2023 4:40 PM IST

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தடுப்பதற்காக அவரது லியோ படத்திற்கு அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கூறியதாவது:

விஜய்யின் லியோ படத்துக்கு தமிழ்நாடு அரசு நெருக்கடி கொடுக்கிறது. ஜெயிலர் படத்துக்கு இதுமாதிரி இடையூறு செய்யப்பட்டதா? அதே நேரு விளையாட்டரங்கில்தான் ஜெயிலர் பாடல்கள் வெளியிடப்பட்டன. இதற்கு முன்னர் விஜய் படத்தின் இசைவெளியீட்டு விழா நடந்திருக்கிறதா இல்லையா?

இதுவரை இல்லாத நெருக்கடியை லியோ படத்துக்கு ஏன் தமிழ்நாடு அரசு தருகிறது? நடிகர் விஜய் படத்துக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு. ஏனென்றால், தம்பி விஜய் அரசியலுக்கு வரப்போகிறார். அதைத் தெரிந்துகொண்ட அரசு இந்த நெருக்கடியை கொடுத்து வருகிறது"என்றார்.

மேலும் செய்திகள்