< Back
மாநில செய்திகள்
அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனை உதவியாளர் குத்தி படுகொலை - கள்ளக்காதலி வெறிச்செயல்
மாநில செய்திகள்

அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனை உதவியாளர் குத்தி படுகொலை - கள்ளக்காதலி வெறிச்செயல்

தினத்தந்தி
|
13 July 2022 9:26 PM IST

ஆரல்வாய்மொழியில் அரசு இ.எஸ்.ஐ. ஊழியரை கள்ளக்காதலியால் சரமாரி குத்திகொலை செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் அரசினர் ஈட்டுறுதி மருந்தகம் (இ.எஸ்.ஐ.) செயல்பட்டு வருகிறது. இங்கு உதவியாளராக வேலை செய்பவர் கிருஷ்ணன்கோவிலை சோந்த ரதிஷ்குமார் (வயது 35)

இந்நிலையில் இந்நிலையில் மாலை 3.15 மணியளவில் காவல்துறைக்கு பெண் ஒருவர் தொலைபேசியில் இங்கு (இ.எஸ்.ஐ) ஒரு பிரச்சனை உடனே வாருங்கள் என்று கூறியுள்ளார். உடனே ஆரல்வாய்மொழி காவல்நிலையத்திலிருந்து ஏட்டு ஒருவர் அங்கு சென்றார். அப்போது அந்த பெண் சொன்னதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதாவது என்னை ஏமாற்றியவரை நான் குத்திகொன்றுவிட்டேன் என்ற சொல்லியுள்ளார். அவர் உடனே மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அங்கு ரதீஷ்குமார் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அங்கு பதற்றமாக நின்றுகொண்டிருந்த அந்த பெண்ணை காவல்நிலையம் கொண்டுவந்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாயின.

சம்பவம் குறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது..

மணவாளகுறிச்சியை சேர்ந்த மேக்சன் என்பவரது மனைவி ஷிபா (வயது 36). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2013-லிருந்து ஷிபாவுக்கும் ரதீஷ்குமாருக்கும் கள்ளதொடர்பு இருந்துள்ளது. ரதீஷ்குமார் வற்புறுத்தலின்பேரில் ஷிபா கணவரை விவாகரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் செய்வததாவும் உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி ரதிஷ்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டதனால் ஷிபா கடும்கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் ஷாபாவிடம் ரதீஷ்குமார் மீண்டும் நான் உன்னை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் இடைவேளை நேரம் வந்த ஷீபா கத்தியால் சரமாரி ரதிஷ்குமாரை குத்திகொலை செய்துள்ளார்.

கொலை செய்த உடன் தொலைபேசி எண் 100-ஐ தொடர்பு கொண்ட கொலையாளி நடந்ததை கூறியுள்ளார். அதன் அடிப்படையிலேதான் போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

மருத்துவமனை காலை 7 முதல் 10.30 வரையிலும் மாலை 4 முதல் 6.30 வரை இடையில் 5 மணிநேரம் ஒய்வு. இடையிலுள்ள நேரத்தில் ஷிபாவை ரதிஷ்குமார் போனில் அழைத்துள்ளதாக தெரிகிறது. சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ள ஷிபா ஆயுதத்துடன் வந்துள்ளார். சாப்பாட்டில் மயக்கமருந்து கொடுத்துள்ளார். பின்னர் ரதிஷ்குமார் மயங்கிய உடன் தன் வெறியை தீர்த்துள்ளாதாக வாக்குமூலம் அளித்துள்ளார்

மேலும் செய்திகள்