< Back
மாநில செய்திகள்
அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கடலூர்
மாநில செய்திகள்

அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
22 July 2023 12:15 AM IST

கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் அரசியல் அறிவியல் மாணவர்கள் நேற்று காலை திடீரென வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சாந்தி மற்றும் பேராசியர்கள் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள், சக மாணவனை பேராசிரியர் ஒருவர் தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லவில்லை. பின்னர் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். அதன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்